Wednesday 20 June 2012

500 பெண்களை குரானை புரட்ட வைத்த அற்புத நிகழ்ச்சி! ஐ.என்.டி.ஜே .நிகழ்ச்சியை பாராட்டிய ஜமா அத்துல் உலமா !


 ஜமா அத்துல் உலமா கூட்டத்தில் உரை நிகழ்த்தும் புதூர் தைக்கா இமாம் 

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எளிய மார்க்கம் இஸ்லாம் எனும் நிகழ்ச்சியை  கடந்த 26.5.12 நடத்தியது!  இதில் இளையான்குடி புதூர் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஒரு மாநாடு போல் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டனர். இந்த   நிகழ்ச்சியை அடுத்த சில தினங்களில் இளையான்குடி வட்டார ஜமாத்துல் உலமாவின் ஷரியத் விளக்க பொதுக் கூட்டத்தில் ஆலிம்கள் இந்த நிகழ்ச்சியை  மனதார பாராட்டினர்.

பல பண்கள் தங்களை தொலை பேசியிலும் நேரிலும் தொடர்பு கொண்டு ஐ.என்.டி.ஜே நடத்திய குரான் போட்டியில் கலந்து கொள்வதற்காக குரான் வசனங்களை கேட்டறிந்ததாகவும் இத்தனை பெண்களை குரானோடு தொடர்பு கொள்ள வைத்த அந்த சகோதரர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்' என ஷரியத் பாதுகாப்பு பொதுக் கூட்டத்தில் பேசினர் அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
 .

இளையான்குடி பேரூராராட்சிக்கு குப்பை அள்ள வண்டி வழங்கிய புதூர் இஸ்லாமிய இளைஞர் பேரவை!

இளையான்குடி பேரூராராட்சிக்கு குப்பை அள்ள 
வண்டி வழங்கிய புதூர் இஸ்லாமிய இளைஞர் பேரவை!
   
இளையான்குடி பேரூராராட்சிக்கு குப்பைகளை அள்ளுவதற்கு போதிய வண்டிகள் இன்றி  வார்டு உறுப்பினரான அல்  இப்ராஹிஷா மூலம் புதூர் இஸ்லாமிய இளைஞர் பேரவைக்கு கோரிக்கை வைக்கப் பட்டு கடந்த மே மாதம் அது பள்ளிவாசலில் வைத்து பேரூராட்சி தலைவர் அயுப் கான் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது ! இந்நிகழ்வின் பள்ளிவாசல் நிர்வாகிகள், பேரவை நிர்வாகிகள், மற்றும் வார்டு உறுப்பினர் அல் இப்ராஹிம்ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

இளையான்குடி புதூரில் பெண்கள் மாநாடான எளிய மார்க்கம் நிகழ்ச்சி!


இளையான்குடி புதூரில்  பெண்கள் மாநாடான எளிய மார்க்கம் நிகழ்ச்சி! 

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி நகரம் சார்பில் எளிய மார்க்கம் இஸ்லாம் நிகழ்ச்சி புதூர் பாவடி திடலில் நடை பெற்றது!  பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் மாநிலப் பொது செயலாளர் செங்கிஸ் கான் ஆகியோர் சிறப்புரையாற்ற இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலப் பேச்சாளர் முஹம்மத் முஹய்யிதீன் இஸ்லாம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்! இளையான்குடி மற்றும் புதூர் , சுற்றுப் புரத்தில் இருந்து வந்து குவிந்த பெண்களால் இந்த நிகழ்ச்சி ஒரு மாநாடு போல் ஆனது! அல்ஹம்து லில்லாஹ்! 


இளையான்குடி புதூர் வரலாற்றில் ஒரு மார்க்க விளக்க   நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு கூட்டத்தை கண்டதில்லை என மக்கள் பேசும் அளவிற்கு இந்தக் கூட்டம நடை பெற்றது. மேலும் பெண்களுக்கான குரான் அறிவுப் போட்டியில் கலந்து கொண்டு பதில் எழுதிய 400 க்கும் மேற்பட்ட பெண்களில் தேர்ந்த்டுக்கப்பட்ட நபர்களுக்கு முதல் பரிசாக இளையான்குடியை சேர்ந்த பாத்திமா ரிஸ்வானா   தங்கத்தோடு, இரண்டாம் பரிசாக ஜைனம்பு கனி எனும் பெண்ணுக்கு மொபைல் போன், மூன்றாம் பரிசாக புதுரை சேர்ந்த சுஷ்மா எனும் சிறுமிக்கு   சார்ஜபிள் பேன் முப்பது வாளி  உள்ளிட்ட பரிசுகள் வழங்கப் பட்டது!    









 3வ்து பரிசு பெரும் புதுர் சுஷ்மா
 2வது பரிசு மொபைல்
 முதல் பரிசு தஙக காதணி

Tuesday 12 June 2012

வபாத் செய்திகள்!


அஸ்ஸலாமு அலைக்கும்! கடந்த சில  நாட்களாக வேலைப்பளு காரணமாக மரணச் செய்திகளை வெளியிட முடியாமைக்கு வருந்துகிறோம்! அந்த செய்திகளை இங்கு மொத்தமாக வெளியுட்டுள்ளோம் யாருடைய மரண செய்தியே னும் விடுபட்டிருந்தால்    தெரிவிக்கவும்!

  1. வாஹம்மா மகள் ஊமத்தா ஜப்பார் ,ரவி ஆகியோரின் சகோதரி நபிஸா 11.5.12 அன்று வபாத் ஆனார்.அன்னாரின் ஜனாஸா புதூரில் நல்லடக்கம் செய்யப் பட்டது!
  2. மீராணி மனைவியும் கரீம் வாத்தியாரின் தாயாருமான மர்யம் 16.5.12 அன்று வபாத்தானார்.  அன்னாரின் ஜனாஸா புதூரில் நல்லடக்கம் செய்யப் பட்டது!
  3. மண்ணாங்கட்டி காத்தும் அண்ணனும், லத்திப் தந்தையுமான ஷரிப் 17.5.12 அன்று வபாத்தானார். அன்னாரின் ஜனாஸா புதூரில் நல்லடக்கம் செய்யப் பட்டது!
  4. OTC செய்யது தந்தை பக்கிர் முஹம்மது 23.5.12 அன்று வபாத்தானார். அனாரின் ஜனாஸா ஒட்டன்சத்திரத்தில் நல்லடக்கம் செய்யப் பட்டது 
  5. மங்கான் யூசுப் மகன் புனே பீர் முஹம்மத் வபாத் ஆனார்.  அன்னாரின் ஜனாஸா புதூரில் நல்லடக்கம் செய்யப் பட்டது!
  6. சண்டி ஜின்னா மனைவி கச்சி மிதார் 25.5.12 வபாத் ஆனார். அன்னாரின் ஜனாஸா புதூரில் நல்லடக்கம் செய்யப் பட்டது!
  7. சாணிப்புழு குட்ட பாட்சா 30.5.12 சென்னையில்  வபாத் ஆனார்.   அன்னாரின் ஜனாஸா புதூரில் நல்லடக்கம் செய்யப் பட்டது!
  8.  கூனைனா அபூதாலிப் மகன் ஜைனுல்லாபுதீன் [பேட்டை ] 11.6.12 அன்று வபாத் ஆனார். அன்னாரின் ஜனாஸா புதூரில் நல்லடக்கம் செய்யப் பட்டது!
  9. அசன் காசிம் மனைவியும் சீனி தாயாருமான கல்ல்ம்பேத்தி காருன் பீவி  14.6.12 அன்று வபாத் ஆனார்.அன்னாரின் ஜனாஸா திருச்சியில் நல்லடக்கம் செய்யப் பட்டது!
  10. கல்லம்பேரன் ஷரிப் மனைவியும் வழுக்கை இப்ராகிம் தாயாருமான பாத்திமா பீவி 20.6.12 அன்று வபாத் ஆனார். அன்னாரின் ஜனாஸா ரோயப்பெட்டை கபரஸ் தானில் நல்லடக்கம் செய்யப் பட்டது. 
  11. ஊமத்தா மைதீன் மகன் அட்டை பைரோஸ் வபாத் ஆனார்..அன்னாரின் ஜனாஸா சென்னை ராயப்பேட்டை கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப் பட்டது..