Saturday 26 November 2011

இந்த ஆண்டின் டிசம்பரில் நடை பெறும் நமதூர் திருமணங்கள்

பெரிதாக்கிப் படிக்க பத்திரிகை மேல் கிளிக் செய்யவும் 

உ.கா.இல்லத் திருமணம் 


                                                       புலவர் இல்லத் திருமணம்
                                                         குருவாசன் இல்லத் திருமணம் 
                                          தேங்காப்பால் இல்லத் திருமணம்



மரைக்காயர் இல்லத் திருமணம் 


                                                      சவ்வாளி இல்லத் திருமணம்

                                   P.N. சபூர் பாட்சா இல்லத் திருமணம்.

தொரவா இல்லத் திருமணம் 


சப்பாணி பேரன் சோன் இல்லத் திருமணம். 


வெள்ளசன் இல்லத் திருமணம் 

Friday 25 November 2011

இன்று சங்கத்தில் உ.கா.இல்லத் திருமணம்!


பெரிதாக்கி படிக்க பத்திரிகை மேல் கிளிக் செய்யவும்.


Wednesday 23 November 2011

சின்னக் குட்டி சுல்த்தார் வபாத் ஆனார்

சின்னக் குட்டி சுல்த்தார் அவர்கள் இன்று [23.11.11 ].திருச்சியில் வபாத் ஆனார். அன்னாரின்  ஜனாஸா நாளை காலை பத்து மணிக்கு புதூரில் நல்லடக்கம் செய்யப் படும். இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன் !  

   

Tuesday 22 November 2011

முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்


முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை 
முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டது என்றால் பல்வேறு அனாச்சாரங்கள் அரங்கேறுவதைப் பார்க்கின்றோம். ரதம் போன்று ஒற்றை ஜரிகைகளாலும் வர்ணங்களாலும் அலங்கரித்து இறுதியில் அதை நதிகளில் போட்டு அழிப்பது இது போன்ற நிகழ்வுகளை “பஞ்சா” என்ற பெயரில் பலர் இந்தியா முழுவதும் செய்து வருகின்றனர்.மும்பை, குஜராத், உத்திரப்பிரதேசம் மற்றும் தமிழகத்தில் மேலப்பாளையம், சென்னை, கோயம்புத்தூர் மற்றும்ஷியாக்கள் வாழக்கூடிய பகுதிகளில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
முஹர்ரம் பண்டிகை என்று அழைக்கப்படும் இப்பண்டிகையில்(?) ஹுஸைன் (ரலி) அவர்கள் கர்பலா போர்க்களத்தில் இறந்ததற்கு துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக இப்பண்டிகை(?) கொண்டாடப்பட்டு வருகிறது. முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் நடக்கும் அனாச்சாரங்களைக் கூர்ந்து கவனித்தால் இது இஸ்லாத்தில் உள்ள பண்டிகை அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக முஹர்ரம் பண்டிகையில் தீமிதித்தல், பூக்குளித்தல், உடல் முழுவதும் சந்தனம் பூசி பிச்சை எடுத்து காணிக்கை செலுத்துதல் மேலும் மாற்று மதத்தவர்கள் தம் கடவுளுக்கு ரதம் அமைத்து ஊர்வலம் செல்வது போன்று நம் சகோதரர்களும் இதுபோன்று ரதம் அமைத்து அதனுள் பஞ்சா(கைவிரல்கள்) செய்து அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நதிக்கரையில் கரைக்கின்றனர். இது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முழுக்க முழுக்கத் தழுவியிருக்கிறது.
முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் இறைவன் ஹலாலாக்கிய மீன், கறி போன்றவற்றை உண்ணாமல் தவிர்க்கின்றனர். இதற்காக ஒரு சிறுவனையோ அல்லது வாலிபனையோ பிரத்யேகமாக விரதம் இருக்கச் செய்து பத்தாம் நாள் அலங்கரித்த குதிரையில் ஏற்றி ஊர்வலம் செல்வர். இந்த சிறுவனையும் அவனை ஏற்றி வரும் குதிரையையும் புனிதமாகக் கருதி கண்ணியமாக்குகின்றனர். இவ்வாறு நடத்தப்படும் எல்லா நிகழ்வுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்மந்தமில்லை. மாற்று மதக் கலாச்சாரங்களைப் பின்பற்றி ஷியாக்களால் உருவாக்கப்பட்டவைதான் இவையனைத்தும்.
குறிப்பாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்படும். இதன் தாத்பரியம் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக் கூடியதாகும். அதாவது ஷியாக்களின் கொள்கையான ஐந்து புனிதர்களை வணங்கும் கொள்கைதான் இந்த பஞ்சாவின் அடிப்படையாகும்.
அதாவது
1) முஹம்மது (ஸல்) அவர்கள்,
2) அவர்களின் திருமகளார் பாத்திமா (ரலி),
3) அலி (ரலி),
4) ஹஸன் (ரலி),
5) ஹுஸைன் (ரலி)
என்று ஐந்து பேரைக் குறிப்பிடுவதே இந்த பஞ்சா எனும் கையாகும். உருது மற்றும் ஹிந்தியில் பாஞ்ச் என்றால் ஐந்து என்று எல்லோரும் அறிவோம். இதை அடிப்படையாகக் கொண்டே பஞ்சா என்ற பெயர் வந்தது.
இறைவனை ஒருமுகப்படுத்தி அவனுக்கு இணையேதும் கூடாது என்று கூறும் இஸ்லாத்தில் இந்த ஐந்து தெய்வக் கொள்கை எப்படி சாத்தியமாகும். அல்லாஹ்வின் அருளால் ஏகத்துவப் பிரச்சாரம் வளர்ந்து பெரும்பாலும் இந்த பண்டிகைகள் உயிரோட்டமற்று ஏதோ கடனுக்காக நடத்தப்படுகின்றன. ஷியாக்களால் உருவாக்கப்பட்டு அது முஸ்லிம்களின் ஒரு பண்டிகையாகவே பல முஸ்லிம்களும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்திய அரசாங்கமும் இதை முஸ்லிம்களின் பண்டிகையாகவே கருதுகிறது. இந்த இஸ்லாத்தைத் தகர்க்கும் அனாச்சாரங்களை கண்டிக்க வேண்டிய சில மார்க்க அறிஞர்கள், மௌலவிகள் கூட இந்தமுஹர்ரம் மாதத்தில் ஆஷுரா நோன்பு என்ற தலைப்பில் ஹுஸைன் (ரலி)யின் கர்பலா போர்க்களத்தையும், சோக வரலாற்றையும் பேசி மக்களிடம் பாராட்டுகள் பெறுவதுதான் கொடுமையிலும் கொடுமை.
இப்படி ஹுஸைன் (ரலி) இறந்ததை பெரும் துக்கதினமாக அனுஷ்டிக்க மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக நான்கு கலீஃபாக்கள் ஆட்சி நடத்தினார்கள் அவர்கள் யாரும் நபி (ஸல்) அவர்களின் இறந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவில்லை எனும் போது அவர்களது பேரர் என்ற காரணத்தினால் அவரை கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்துவது வரம்பு மீறிய செயலாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஹஸைன், ஹுஸைன் இருவரும் உலகின் இரு நறுமணம் மிக்க மலர்கள். (ஆதாரம் புகாரி) இப்படிப் பல சிறப்புகள் அவ்விருவருக்கும் உண்டு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் இவர்கள் பெயரால் நடத்தப்படும் பித்அத்துக்களை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. குறிப்பாக இப் பஞ்சாஊர்வலத்தில் மாரடித்தல் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதாவது யா அலீ!, யா ஹுஸைன்! என்று அவர்கள் இறந்த தினத்தில் மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைப்பது பக்தி எனும் பெயரில் தன் உடம்பில் காயங்களை ஏற்படுத்திக் கொள்வது போன்றவற்றை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (மரணித்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுது) தன் கன்னத்தில் அடித்துக் கொண்டோரும் சட்டையைக் கிழித்துக் கொண்டவரும், அறியாமைக்கால அழைப்பைக் கொண்டு அழைத்தவரும் நம்மைச் சார்ந்தவரல்ல.
(அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூது (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
மேலும் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித் தராத வழியில் ஹுஸைன்(ரலி) அவர்களின் மறைவிற்காக நோன்பு வைப்பது அத்தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பது நேர்ச்சை செய்வது, பாத்திஹா ஓதிக் கொளுக்கட்டை போன்ற பதார்த்தங்களைப் பரிமாறுவது போன்ற அனாச்சாரங்களை முஸ்லிம்கள் களைவதோடு மற்ற அறியாத முஸ்லிம்களையும் எடுத்துக் கூறித் தடுக்க வேண்டும்.
ஊர்வலம் என்ற பெயரில் கொட்டு மேளதாளங்களுடன் செல்வதால் பல சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன. மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற ஊர்வலங்களில் வன்முறை ஏற்பட்டு அரசாங்கம் இந்த பஞ்சா ஊர்வலத்தைத் தடை செய்துள்ளது. இதுபோன்ற அறியாமையினால் செய்யும் செயல்களால் மதக்கலவரங்கள் ஏற்படுகின்றன. அன்பிற்குறிய முஸ்லிம்களே! நமது இறைவன் ஒருவன்தான். அவனுக்கு எந்தவகையிலும் நாம் இணைவைக்கக் கூடாது. நபி (ஸல்) அவர்களின் மரணத்தோடு தூதுத்துவம் நிறைவுற்றுவிட்டது. அதற்குப்பின்னால் ஏற்படடுத்தப்பட்ட அனைத்தும் பித்அத்துக்கள் ஆகும். நபி (ஸல்) அவர்கள் எந்த காரணத்திற்காக நோன்பு நோற்றார்களோ அதே காரணத்திற்காக நாமும் நோன்பு நோற்று அதற்குரிய முழு நன்மைகளையும் அடைய அல்லாஹ் அருள் செய்வானாக.

Sunday 20 November 2011

இளையான்குடி பேருராட்சி தலைவர் அயூப்அலிகான் மறுப்பு அறிக்கை

தினமலர் செய்திக்கு பேரூராட்சி தலைவர் அயூப் அலிகான் மறுப்பு அறிக்கை




15.11.2011 ஆம் தேதியிட்ட தினமலர் நாளிதழில் கிடா வெட்டி நேர்த்திகடன் செலுத்திய இளையான்குடி பேருராட்சி முஸ்லிம் தலைவர் என்ற தலைப்பில் எனது பெயருக்கு களங்கம் ஏற்hடுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், என்னிடம் எவ்வித பேட்டியும் எடுக்காமல், பேட்டி எடுத்தது போல் பொய்யான மற்றும் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நடந்து முடிந்த பேருராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்டு என்னிடம் தோல்வி அடைந்தவர்களில் சிலர் மேற்படி தோல்வியை ஜீரணிக்க முடியாமல் என் மீது ஏற்பட்டுள்ள காழ்புணர்ச்சியின் காரணமாக பத்திரிக்கைக்கு பொய்யான தகவல் கொடுத்து இச்செய்தியை வெளியிட செய்துள்ளனர். மாற்று மதத்தினை சேர்ந்த எனது ஒரு சில நண்பர்கள் எனக்கு வாக்களித்த கிராமபுற மக்களுக்கு விருந்து வைத்தனர். பேருராட்சி தலைவர் என்ற முறையில் எனக்கு கொடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று மதநல்லிணக்கத்துடன் அவ்விருந்தில் நானும் கலந்து கொண்டேன் என்பதைத் தவிர வேறு எவ்வித உள்நோக்கமும் கிடையாது. எனவே, துவேச மனப்பான்மையுடன் தினமலர் நாளிதழில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், அவதூரான இச்செய்தியை வெளியிட்ட தினமலர் நாளிதழின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.



அன்புடன்,
A.அயூப்அலிகான்
பேருராட்சி தலைவர்
இளையான்குடி

மரணச் செய்திகள் !




  1. சூடி சுல்த்தார் இன்று 20.11.11 சென்னையில் வபாத் ஆனார். அன்னாரின் ஜனாஸா நாளை ராயப்பேட்டையில் கப்ருஸ்தனில் நல்லடக்கம் செய்யப் படும்.
  2. நேற்று 19.11.11 நரித்தலையன் காட்டுபவ பேரன் அன்சாரி சென்னையில் வபாத் ஆனார். அன்னாரின் ஜனாஸா நேற்று மாலை ராயப்பேட்டை கபரஸ்தானில்அசாருக்கு பின் நல்லடக்கம் செய்யப் பட்டது.


3.நேற்று 19.11.11 ஸ்டைல் காதர் தந்தை [பரபரப்பு] பாஞ்சுப்பீர் புதூரில்     வபாத் ஆனார். அன்னாரின் ஜனாஸா புதூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

Tuesday 15 November 2011

அழகிய கடன் குர்பானி 69 மாடுகள்



நமதூர் மக்களின் மார்க்க கடமைகளில் உதவி வரும்  அழகியகடன் அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டு சுமார் 500 பங்குகள் சேர்க்கப் பட்டு திருச்சியில் பாதி மாடுகளும் இங்கு சென்னைக்கு அருகில் மீதி மாடுகளும் குர்பானி கொடுக்கப் பட்டு பங்கு தாரர்களுக்கும் , ஏழைகளுக்கும் கறி விநியோகிக்கப் பட்டது. மேலும் இந்த வருடம் அழகிய கடன் ஆடு விற்பனை, மற்றும் மற்றும் அறுக்க இடம் கசாய் ஏற்பாடுகளும் செய்தது குறிப்பிடத் தக்கது.











மரணச் செய்தி!



பெட்டிக்கடை  அமானுல்லாஹ் மனைவியும் கரண்ட் பஷீர் மாமியாருமான  மரியம் [விஸ்க் மகள்] இன்று காலை புதூரில் வபாத் ஆனார்.அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் நாளை புதூரில் நல்லடக்கம் செய்யப் படும்.  இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜி வூன்.  

Monday 7 November 2011

பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இஸ்லாத்துக்கு விரோதமானவை : தாருல் உலூம் பத்வா


முஸாபர்நகர் : வட இந்திய முஸ்லீம்களின் முக்கிய மத கல்வி நிறுவனமான தியோபந்தில் உள்ள தாருல் உலூம் மதரஸா பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இஸ்லாத்துக்கு விரோதமானவை என்றும் அவை மேற்கத்திய நாடுகளின் கலாசாரம் என்றும் குற்றம் சாட்டி உள்ளது.
அலிகார் முஸ்லீம் பல்கலைகழகத்தின் நிறுவனர் சர் சையது அஹ்மது கானுக்கு பிறந்த நாள் கொண்டாடுதல் சம்பந்தமாக ஒரு மாணவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது இப்பத்வா வழங்கப்பட்டது.
மேலும் தாருல் உலூமின் துணை வேந்தர் மெளலானா அபுல் காசின் நுமானி கூறும் போது ஷரியத்துக்கு மாற்றமான பிறந்த நாள் கொண்டாட்டங்கள் போன்றவை மேற்குலக கலாச்சார பாதிப்பு என்றும் தாருல் உலூமின் சார்பாக முஹம்மது நபி அவர்களின் பிறந்த நாளையே கொண்டாடுவதில்லை என்றும் கூறினார்.

Sunday 6 November 2011

இரு பெருநாள் தொழுகை பற்றிய நபிமொழித் தொகுப்பு


 

பெருநாள் தொழுகையின் நேரம்:
ஈத் பெருநாட்களில் குளிர்ந்த காலை நேரங்களில் அவரவர் வீடுகளிலிருந்து வெளிப்பட்டு (தொழ) செல்பவர்களுக்கு அல்லாஹ் அளப்பரிய அருளைப் பொழிகிறான். அறிவிப்பவர்: அனஸ்பின் மாலிக்(ரலி) நூல்: இப்னு அஸாகிர்
இரண்டு ஈட்டிகளின் உயரத்திற்கு சூரியன் உயரும்போது நோன்புப் பெருநாள் தொழுகையை நபி(ஸல்)தொழுவார்கள். (ஒரு ஈட்டியின் உயரம் என்பது ஏறத்தாள மூன்று மீட்டர்களாக ஆகும். அறிவிப்பாளர்: ஜுன்துப்(ரலி) நூல்: அஹ்மது இப்னுஹஸன்
நோன்புப் பெருநாளில் தொழச் செல்வதற்கு முன்பே சாப்பிடுவது
நபி(ஸல்)அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள்தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள்தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: திர்மிதீ
சில பேரிச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி(ஸல்)அவர்கள் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) புகாரி மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
நபி(ஸல்)அவர்கள் ஈதுல் பித்ர் (நோன்பு) பெருநாளன்று காலையில் ஏழு பேரித்தம் பழங்களை சாப்பிடாமல் வெளியேற மாட்டார்கள் (அறிவிப்பாளர்: ஜாபிர்பின் சம்ரா(ரலி) நூல்: தப்ரானி மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. (அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) புகாரி)
தக்பீர்
ஈத் பெருநாட்களை அல்லாஹ்வைப் புகழ்வது கொண்டும் தக்பீரைக் கொண்டும் அழகு படுத்துங்கள். அறிவிப்பாளர்: அனஸ்பின் மாலிக்(ரலி) நூல்:நயீம்
பெருநாள் வந்துவிட்டால் நபி(ஸல்)அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். புகாரி
நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் ஓர் ஈட்டி நாட்டப்படும். நபி(ஸல்)அவர்கள் (அதை நோக்கித்) தொழுவார்கள். இப்னுஉமர்(ரலி),புகாரி
நபி(ஸல்)அவர்கள் (பெருநாள் தொழுகைக்காகத்) தொழும் திடலுக்குப் புறப்படுவார்கள். அவர்களுக்கு முன்பே கைத்தடி எடுத்துச் செல்லப்பட்டுத் தொழும் இடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும். அதை நோக்கி நபி(ஸல்)தொழுவார்கள். இப்னு உமர்(ரலி), புகாரி
திடலில் பெருநாள் தொழுகை:
பெரும்பாலும் நபி(ஸல்)அவர்கள் பெருநாள் தொழுகைகளை திறந்த பொது மைதானத்தில் தொழுதுள்ளார்கள். மழை காலத்தில் பெருநாள் தொழுகையை பள்ளியில் நடத்தினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) அபூதாவூத், இப்னுமாஜா
நபி(ஸல்)அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். அபூ ஸயீத்(ரலி), புகாரி
பெருநாள் தொழுகையில் பாங்கும், இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை
ஜாபிர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் கூறினார்கள்: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. நூல்:புகாரி
நபி(ஸல்)அவர்கள் (பெருநாள் தொழுகைக்குத்) தயாராகித் தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபி(ஸல்)அவர்கள் (உரை நிகழ்த்தி) முடித்து இறங்கிப் பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கை மீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி), நூல்: புகாரி
பிலால்(ரலி) தம் ஆடையை ஏந்திக்கொள்ள, பெண்கள் தங்கள் தர்மத்தை அதில் போடலானார்கள். நான், நபி(ஸல்)அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடன் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர். புகாரி
நபி(ஸல்)அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோர் இரண்டு பெருநாள்களிலும் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுபவர்களாக இருந்தனர். இப்னு உமர்(ரலி), நூல்:புகாரி
பெருநாள் தொழுகைக்கு முன் பின் எந்த தொழுகையுமில்லை
நபி(ஸல்)அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் சென்றனர் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்:புகாரி
நபி(ஸல்)அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி(ஸல்)விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: புகாரி
முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் 
நபி(ஸல்)அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: அஹ்மத், இப்னுமாஜா
“நோன்புப் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீரும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீரும் உள்ளது. அவை இரண்டிற்கும் பின்னரும் கிராஅத் (குர்ஆனை ஓதுதல்) உண்டு” என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் என அம்ரு இப்னு ஷுஐப் தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். நூல்: புகாரி, திர்மிதீ
பெருநாள் தொழுகையில் பெண்கள்:
நபி(ஸல்)அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி(ஸல்)விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்:புகாரி
வீட்டில் தனித்து இருக்கும் நாங்கள் மாதவிடாய் பெண்கள் முதற்கொண்டு இரு பெருநாள் தொழுகைக்கு வெளியே வர ஆணையிடப்பட்டோம் தொழுகையில் கலந்து கொள்ளவும், பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டோம். ஆனால் மாதவிடாய் பெண்கள் தொழுமிடத்திலிருந்து ஒதுங்கி இருக்க பணிக்கப்பட்டோம். அப்போது ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்காவது உடை இல்லையெனில் என்ன செய்வது என வினவினார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் உங்களது தோழிகளிடமிருந்து ஓர் உடையை கடனாக வாங்கி உடுத்தி வாருங்கள் என பதில் கூறினர். அறிவிப்பவர் உம்மு அதிய்யா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயி,நூல்:இப்னுமாஜ்ஜா
நபி(ஸல்)அவர்கள் (பெருநாள் தொழுகைக்குத்) தயாராகித் தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபி(ஸல்)அவர்கள் (உரை நிகழ்த்தி) முடித்து இறங்கிப் பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கைமீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். பிலால்(ரலி) தம் ஆடையை ஏந்திக் கொள்ள, பெண்கள் தங்கள் தர்மத்தை அதில் போடலானார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி), புகாரி
நபி(ஸல்)அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி(ஸல்)விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி
பெருநாள் தொழுகையில் ஓதிய வசனங்கள்:
நபி(ஸல்)அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் ஜுமுஆத் தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (87வது அத்தியாயத்தையும்) ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா (88வது அத்தியாயத்தையும்) ஓதி வந்தனர். பெருநாளும், ஜுமுஆவும் ஓரே நாளில் வரும்பொழுது இந்த இரண்டு அத்தியாயங்களை இரண்டு தொழுகையிலும் ஓதுவார்கள். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ரலி) நூமான் இப்னு பஷீர், நூல்கள்: முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ
50வது அத்தியாயத்தையும் 54வது அத்தியாயத்தையும் ஓதியதாக ஓர் அறிவிப்பு முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரார்த்தனை:
பருவமடைந்த மற்றும் மாதவிடாய் பெண்களையும் பெருநாள் தொழுகைக்கு வெளியே அனுப்புமாறு நபி(ஸல்)அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். நற்பணிகளில் மற்றும் முஸ்லிம்களுடைய துஆவில் அவர்கள் பங்கு பெறுவதற்காக. ஆனால், மாத விலக்கான பெண்கள், தொழும் இடத்தின் ஓரப்பகுதியில் இருக்க வேண்டும். என உம்மு அதிய்யா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி) நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.

புதூர் மக்கள் அனைவருக்கும் தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்!

புதூர் மக்கள் அனைவருக்கும் தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்!

தியாகத்தை நினைவு கூறும் இந்த ஏகத்துவ திருநாளில் உலகெங்கும் வாழும் நம் சொந்தங்கள் அனைவருக்கும் புதூர் மக்கள் இணையத் தளம் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!

Saturday 5 November 2011

அழகிய கடன் அறக்கட்டளை சார்பில் ஆடு விற்பனை !

அழகிய  கடன் அறக்கட்டளை சார்பில் ஆடு விற்பனை !


பல்வேறு நற்பணிகளை செய்து வரும் அழகிய கடன் மக்களின் மார்க்க கடமைகளில் உதவி செய்து வருகிறது!அந்த அடிப்படையில் கடந்த ஆண்டுகளைப் போலவே கூட்டுக் குர்பானி, மற்றும் அழகிய கடனின் நேரடி கண்காணிப்பில் நமது ஊரில் வளர்க்கப் பட்ட வெள்ளாட்டு விற்பனையையும்  துவங்கி உள்ளது. மேலும் இந்த  ஆண்டு  ஆடுகளை  அறுக்க  இட  வசதி மற்றும் கசாய் வசதி போன்றவற்றை கட்டண சேவையுடன் ஏற்பாடு செய்துள்ளது  ! ஆகையால் ஜமாத்தார்கள் தங்கள் குர்பானி தேவைகளுக்கு அழகிய கடனை அணுகவும்.   தொடர்புக்கு -௦044-28419786, 9841182029

அதே போல் நமதூர் சகோதரர்களான சேப்பாக்கம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஒட்டகம் [rs 5500] மற்றும் மாடு [rs 1350] கூட்டுக் குர்பானிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தொடர்புக்கு- கலீல் 9841470019 9976885917 

பீட்டங்காயன் அம்சாரலி மருமகன் இப்ராஹிம்ஷா வபாத் ஆனார் !


பீட்டங்காயன் அம்சாரலி மருமகன் இப்ராஹிம்ஷா 
[மண்டையன் மன்சூர் சச்சா] இன்று சென்னை எழு கிணறு பகுதியில் வபாத் ஆனார் ! அன்னாரின் ஜனாசா இன்று அசருக்குப்பின் ராயப்பேட்டை கபரஸ்தானில்  நல்லடக்கம் செய்யப் பட்டது! 

Tuesday 1 November 2011

மீரானி மகன் அஹ்மது வபாத் ஆனார்.

 மீரானி மகன் அஹ்மது நேற்று முன் தினம் மதுரையில் வபாத் ஆனார்.
உடல் நலமின்றி மதுரை  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரின் உடல் நேற்று புதூரில் நல்லடக்கம் செய்யப் பட்டது.