Tuesday 21 February 2012

அரவி கச்சி முஹம்மத மனைவி ரம்ஜான் பீவி வபாத்!

அரவி கச்சி முஹம்மத மனைவி ரம்ஜான் பீவி நேற்று புதூரில் வபாத் ஆனார்.
அன்னாரின் உடல் இன்று புதூரில் நல்லடக்கம் செய்யப் பட்டது! இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி   ராஜிவூன்.   

இளையான்குடியில் இஸ்லாத்தை ஏற்ற 6 பேர். அழகிய கடன் வழங்கி காத்த INTJ !


அல்லாஹ்வின் திருப்பெயரால்...  

இளையான்குடியில் இஸ்லாத்தை ஏற்ற 6 பேர்.
அழகிய கடன் வழங்கி காத்த INTJ !  

இளையான்குடியில் உள்ள கிறிஸ்தவ குடும்பம் ஒன்று இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு அங்குள்ள தாவா சென்டரில் இஸ்லாத்தை ஏற்றது! அவர்கள் ஏகத்துவ கலிமாவை மொழிந்து தங்கள் பெயர்களையும் முறைப்படி கீழ்க் கணடவாறு மாற்றிக் கொண்டனர். அல்ஹம்து லில்லாஹ்.

தனபால்-வயது 40 இப்ராஹிம்
தனபாக்கியம்-  வயது 35 சாரா 
ஸ்டிபன் -வயது 14 இஸ்மாயில் 
நவீனா-வயது 10 மர்யம் 
ஸ்டாலின்- வயது 8 இஸ்ஹாக்
வில்லின்-வயது 4 யஃகூப்      

இஸ்லாத்தை ஏற்ற இவர்கள் ஒரு செங்கல் சூளையில் மொத்தமாக முன் பணம் வாங்கி  இருப்பது தெரிய வந்தது . இந்நிலையில் இதில் இருந்து மீட்டு தங்களின் வாழ்வாதரத்திற்கு ஒரு வியாபாரத்திற்கு கடன் கொடுத்து உதவுமாறு இளையான்குடி நகர இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திடம் கோரிக்கை வைத்தனர். அல்லாஹ்வின் அருளால் அவர்களின் கோரிக்கையை ஏற்று மாநில செயலாளர் செங்கிஸ் கானின் முயற்சியால் நேற்று இளையான்குடி கிளை நிர்வாகம் மூலம் ரூ 30000 வட்டியில்லா அழகிய கடன் வழங்கி வட்டியில் மீட்க பட்டார்கள்  . 


Saturday 18 February 2012

புதூர் ஜிம்கானா கிரிகெட் அணி கால் இறுதியில்...

புதூர் ஜிம்கானா கிரிகெட் அணி கால் இறுதியில்...

விளையாட்டில் ஆர்வம் கொண்ட நமது முன்னோர்கள் புதூர் ஜிம்கானா கிளப் எனும் பெயரில் துவங்கிய இந்த அமைப்பு முதலில் கால்பந்து விளையாட்டிலும் ,பிற்காலத்தில் கபடியிலும் கால் பதித்து பல மாவட்ட மாநில விளையாட்டு போட்டிகளை நமதூரில் நடத்தியதோடு மட்டுமின்றி , வெளியூர்களிலும் சென்று விளையாடி நமதூரின் புகழை நிலை நிறுத்தினர்.


தற்போது அடுத்த தலைமுறையும் எங்கள் முன்னோர்களுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல என நிருபிக்கும் வகையில் இந்த தலைமுறையின் விளையாட்டான கிரிக்கெட்டில் பல விருதுகளை வென்று வருகிறது. சமிபத்தில் கும்மிடிப்பூண்டியில் நடந்த ஒரு போட்டியில் பல அணிகளை வென்று காலிறுதி வரை சென்று உள்ளது. சென்னை நகர பரபரப்பு வாழ்க்கை, வியாபாரம் போன்ற பல்வேறு சூழல்களுக்கு மத்தியிலும் இது போன்ற விளையாட்டுகளில் பங்கெடுப்பது புதூர் மண்ணுக்கு பெருமையாகும்.  

ஜிம்கானா கிரிகெட் அணியின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு;






       

Thursday 16 February 2012

சைனம்பிள்ளை வபாத் ஆனார் !




ஒவாயன் காதர் மைதீன் மனைவியும் ,காட்டுபாவா தாயாருமான
OTC சைனம்பிள்ளை வபாத் ஆனார் ! அன்னாரின் ஜனாசா இன்ஷா  அல்லாஹ் 
நாளை 17.2.12 காலை 9 மணிக்கு சென்னை ராயப்பேட்டை கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப் படும்.     

Monday 13 February 2012

இளையான்குடியில் கலிமா சொல்லி இஸ்லாத்திற்கு திரும்பிய 19 பிரிவினர்.






இளையான்குடியில் பெருகி வந்த 19 கூட்டத்தினர் பற்றி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட விழிப்புணர்வு பிரசுரங்களும். அதைத் தொடர்ந்து நடத்திய விழிப்புணர்வு கூட்டங்களும் ஏற்படுத்திய தாக்கத்தால் மேலப்பள்ளி வாசல் நிர்வாகம் இந்த வழி கெட்ட கூட்டத்தை இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் என தீர்மானம் நிறைவேற்றி இவர்களோடு ஜமாத்தார்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என பட்டியல் வெளியிட்டனர். இதன் விளைவால் சிலர் மீண்டும் கலிமா சொல்லி இஸ்லாத்திற்கு திரும்பியுள்ளனர்.
அல்ஹம்து லில்லாஹ்.இந்த வெற்றிக்கு வித்திட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் விழிப்புணர்வு கூட்டத்தின் வீடியோ உங்கள் பார்வைக்கு !
vedio-1
vedio-2

Monday 6 February 2012

சேப்பாக்கத்தில் INTJ முகாமில் புதூர் இளைஞர்கள் ஏராளமானோர் ரத்ததானம் செய்தனர்.

சேப்பாக்கத்தில் INTJ  முகாமில் புதூர் இளைஞர்கள்
 ஏராளமானோர் ரத்ததானம் செய்தனர்.
சென்னை சேப்பாக்கம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடந்த 5.2.12 ஞாயிறு அன்று வாலஜா பெரிய மஸ்ஜித் அருகில் மாபெரும் இரத்த தான முகாம் ஏற்பாடு செயப்பட்டு இருந்தது.இதில் நமதூரை   சேர்ந்த  பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

சர்க்கரை நோயாளிகளும் , மருந்து எடுத்துக் கொள்வோரும் மதியம் இரண்டு மணிக்கு மேல் வந்தவர்களும் தாங்கள் ரத்ததானம் செய்ய ஆர்வமுடன் வந்தும் அவர்களது ரத்தம் ஏற்றுக் கொள்ளப் படாததால் வருத்தத்துடன் சென்றனர்.    இதில் கலந்து கொண்ட திருவல்லிக்கேணி ஆய்வாளர் உள்பட முஸ்லிமல்லாத பலருக்கு குரான் தமிழாக்கம் வழங்கப்பட்டது.