Wednesday 28 December 2011

மலையாண்டி மாலிக் வபாத் ஆனார்.

மலையாண்டி ஹனிப் மகனும் கருசா அலாவுதீன் மருமகனுமான மாலிக் அவர்கள் இன்று 29.12.11 அதி காலை வபாத் ஆனார். அன்னாரின் ஜனாசா நாளை
புதூரில் நல்லடக்கம் செய்யப் படும்.  

Monday 26 December 2011

உ .கா.சிக்கந்தர் சென்னையில் வபாத் ஆனார்.



உப்புகாசிம் மகனும் சிந்தா மிதாரின் சகோதரருமான சிக்கந்தர் நேற்று சென்னையில்   வபாத் ஆனார். அன்னாரின் ஜனாசா புதூர் கொண்டு செல்லப் பட்டு இன்று [26.12.11] காலை  8 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

Sunday 18 December 2011

வெடலை ஆரிப் மகள் ஜும்மானா வபாத் ஆனார் !

மன நலம் குன்றிய வெடலை ஆரிப் மகள் ஜும்மானா இன்று 19.12.11 மதியம் திருச்சியில் வபாத் ஆனார் !அன்னாரின் ஜனாஸா நாளை நல்லடக்கம் செய்யப்படும்.
  

Wednesday 7 December 2011

மலைகளைப் போல நன்மைகள் வேண்டுமா?



மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து
 கொள்கிறாரோ அவருக்கு ஒரு கிராத்’ அளவு நன்மையும்
 அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ
 அவருக்கு இரண்டு கிராத்’ அளவு நன்மையும் கிடைக்கும். 
அதற்கு இரண்டு கிராத்’ என்றால் என்ன என வினவப்பட்டது. 
அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்” என
 நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
          ஆதாரம்: புகாரிமுஸ்லிம்.

மரண செய்தி!




சேவர் நாகூர் மீரா மகளும் மாம்பழம் யாசினின் கொளுந்தியாளுமான குலாப்பர் நேற்று 7.12.11 புனேயில் வபாத் ஆனார். அன்னாரின் ஜனாசா திருச்சி கொண்டு வரப்பட்டு இன்று நல்லடக்கம் செய்யப் படுகிறது.     

Monday 5 December 2011

இளையான்குடியில் INTJ பொதுக் கூட்டம் ! எஸ்.எம்.பாக்கர் ,செங்கிஸ் கான் உரை.








இளையான்குடியில் கடந்த சனியன்று மாலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக் கூட்டம் நடை பெற்றது! மாவட்ட செயலாளர் துருக்கி ரபீக் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாநில செயலளர் செங்கிஸ் கான் 'இஸ்லாமிய ஆட்சியாளர்களும் இன்றைய ஆட்சியாளர்களும்' எனும் தலைப்பிலும் '19 கூட்டம் வழி கேடர்களே'    எனும் தலைப்பிலும் , எஸ்.எம்.பாக்கர் 'இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை' எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினர் .

கூட்டம் துவங்கும் முன்பே இளையான்குடியில் உள்ள வழி கேட்டுக் கூட்டமான 19 கூட்டத்தினர் போனில் சவால் விட்டனர்.உங்கள் சவாலை எழுத்துப் பூர்வமாக நேரில் தாருங்கள் எனக் கேட்டு பின்னர் முகவரி இல்லாமல் ஒரு கடிதத்தை கொடுத்துள்ளனர். பின்னர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது போன் போட்டு தொல்லை   செய்து கொண்டிருந்தனர். 

அவர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாகப் பேசிய மாநிலப் பேச்சாளர் குரான் வசனங்களைக் கொண்டே விளக்கி இப்போது இந்த மேடைக்கு வரத் தயாரா?சவால் விடுத்தார்.   அது மட்டுமில்லாமல் குரான் மட்டும் போதும் எனக் கூறும் இவர்கள் 'குரானை மட்டும் வைத்துக் கொண்டு தொழுகையை செய் முறையாக தொழுது காண்பித்தால் ஒரு லட்சம் ருபாய் பரிசு என அறிவித்த இளையான்குடியை சேர்ந்த துபாய் சகோதரர் ஜாவித் அவர்களின் சவாலும் அங்கு மேடையில் அறிவிக்கப் பட்டது !