Friday 30 September 2011

முதியோர் உதவித் தொகை வழங்கும் முன்மாதிரி ஜமாஅத்


முதியோர் உதவித் தொகை வழங்கும் முன்மாதிரி ஜமாஅத். - புதூர் பற்றி இளையான்குடி வெளிச்சம் செய்தி !


ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவித் தொகை என்று அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ஒரு ஜமாஅத் செய்து வருவதாக அறிந்து அது பற்றி விசாரித்தோம்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புதூரைச் சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள், சென்னையில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன. தங்களுக்கென்று புதூர் முஸ்லிம் நற்பணி மன்றம் என்ற அமைப்பை கடந்த சில ஆண்டு துவங்கி, அதற்கென சென்னை சேப்பாக்கம் தைபூன் அலிகான் தெருவில் இரு இடத்தை வாங்கினர்.

பத்தாண்டு காலம் பணிகள் ஏதுமின்றி இருந்த இடத்தில், இளைஞர்கள் சிலரால் சென்னை வாழ் புதூர் மக்கள் நலச் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, மேற்படி இடத்தில் தற்போது கல்யாண மண்டபம் ஒன்று கட்டப்பட்டு, மிகக் குறைந்த வாடகையில் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஜமாஅத்தை சேர்ந்த ஏழைகளுக்கு முற்றிலும் இலவசமாகவும் வழங்கப்படுகிறது. இதில் வரும் வருமானத்தை ஜமாஅத்தைச் சேர்ந்த ஆதரவற்ற முதியோர்கள் சுமார் 200 பேருக்கு மாதம் ரூ.200 வீதம் உதவித்தொகை வழங்கி வருகின்றனர்.

இந்தச் சிந்தனை எப்படித் தோன்றியது என அந்த அமைப்பின் நிர்வாகிகளான சுபுஹான் மற்றும் காதர் கனி ஆகியோரிடம் கேட்டபோது, "இளைஞர்களாகிய நாங்கள் இக்கட்டிடத்தை கட்டி முடித்து விட்டு சில பிரச்சினைகளால் நாங்கள் நிர்வாகத்திலிருந்து வெளியேறியபோது, இதில் வரும் மண்டப வாடகையை நமது ஜமாஅத்திலுள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு பயன்பெறும் வகையில் செய்துவிட்டு வெளியேறுவோம் என முடிவு எடுத்து செயல்படுத்திவிட்டு, வெளியேறினோம்.

ஆனால் அல்லாஹ்வுடைய நாட்டத்தால் நிர்வாகம் மீண்டும் எங்களிடமே வந்து சேர்ந்தது. அது முதல் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். மேலும் சுமார் இரண்டு ஆலிம்களைக் கொண்டு சுமார் 100 குழந்தைகளுக்கு குர்ஆன் வகுப்புகளையும் நடத்தி வருகிறோம். ரமலான் மாதத்தில் இந்த மண்டபத்தை இஃப்தார், ஐவேளைத் தொழுகை, பயான் பெண்களுக்கான இரவுத் தொழுகை போன்ற காரியங்களுக்காகவும் பயன்படுத்தி வருகிறோம்", எனக் கூறினார்.

மேலும் மற்றொரு அமைப்பான அழகிய கடன் உதவி அறக் கட்டளை மூலம் வட்டியில்லாத கடனுதவி திட்டம் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். ஜகாத், ஃபித்ராபோன்றவற்றை மக்களிடம் வசூலித்து அதையும் சிறப்பாக விநியோகித்து வருகின்றனர்.

பல நன்மையான காரியங்களுக்கு புதூரைச் சேர்ந்த முஸ்லிம்கள் முன்மாதிரியாகத் திகழ்ந்து கொண்டுள்ளார்கள் என்பதற்கு சாட்சியம் கூறும் விதமாக இருக்கிறது இவர்களின் சேவைகள்.
'எஸ்.எம்.எஸ். செய்தி சேவையை' துவக்கி ஊர் சம்பந்தமான அனைத்து செய்திகளையும் உலகெங்கும் உள்ள அனைத்து புதூர் ஜமாஅத்தார்களும் அடுத்த அரை மணி நேரத்திற்குள் எஸ்.எம்.எஸ். வழியாக தெரிந்து கொள்ளச் செய்கின்றனர்.

"சென்னையில் ஏதாவது ஒரு கபர்ஸ்தானில் பெருங்கூட்டமாக ஜனாஸா நல்லடக்கம் நடைபெற்றால், அது புதூர் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர் எனும் அளவிற்கு செய்திகள் உடனடியாக எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டு, ஜனாஸா அடக்கஸ்தலத்தில் மக்கள் குவிந்து விடுவர்", என்கிறார் சுபுஹான்.

இதைக் கேட்டபோது நமக்கு வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. சென்னையில் வசிக்கும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த எந்த ஜமாஅத்துக்களிடமும் இல்லாத பிற ஜமாஅத்துக்கள் பின்பற்றப்பட வேண்டிய சில முன்மாதிரிகள் இளையான்குடி புதூர் ஜமாஅத்திரிடம் இருப்பது உண்மை என்பதை உணர்ந்து, அவர்களுக்கு நமது பாராட்டுதலை தெரிவித்து விடைபெற்றோம்.
(இப்னு உசேன்) ஆதாரம்:சமுதாய மக்கள் ரிப்போர்ட்

நற்பனி மன்றத்தைப்பற்றி மேலும்,


1989 ம் ஆண்டு, புதூர் முஸ்லீம் நற்பனி மன்றத்திற்க்காக இடம் வாங்கப்பட்டது.

1998 ல் இளைஞர்கள் உருவாக்கிய 'சென்னை வாழ் புதூர் மக்கள் நல சங்கம்' என்ற அமைப்பு கட்டியது

2006 ஆம் ஆண்டிலிருந்து "புதூர் முஸ்லீம் நற்பனி மன்றம் (இளையான்குடி)" என நிரந்தர பெயரில் இயங்கி வருகிறது


நிறுவனர்கள்
ஜனாப் இரங்கூன் சுலைமான் Ex. M.C. அவர்கள்

A.கான் முஹமது "

O.K.J.ஜெயினுலாபுதீன் "

" M.S.P.கரிம்கனி "

" ஒட்டன்சத்திரம் காதர் "

" S.ஜான் முஹமது "

" S.M.S.சாகுல் ஹமீது "
தற்போதைய நிர்வாகிகள்:
ஜனாப் A.சுபுஹான் (தலைவர்) அவர்கள்

" M.S.P.கரீம்கனி (செயலர்) "

" M.S.ஹக்கீம் (பொருளாளர்) "

" Y.முஹம்மது (உறுப்பினர்) "

" காதர் கனி " "

" S.முஹம்மது " "

" கரடன் லியாக்கத்தலி " "

" சாலீஹ் " "

" தஸ்தஹிர் " "

P.S. செங்கிஸ்கான் " "

தாரிக் " "

முஹமது ர‌ஃபி " "

O.K.J.ஜெயினுலாபுதீன் " "

" ஹுதரத் அஜ்மல் " "

நிர்வாகம்

Home

1 comments:


Anonymous said...
THE REAL PART OF PUDUR PEOPLE.THNANKS TO COMMITTE.ONE OF THE GOVERMNTPUDER SOCIETY.(makkalpannam makkalku shalukrthu) to issue the news realygreat.khan.

Thursday 29 September 2011

இன்று சென்னையில் கரடன் இல்லத் திருமணம்,


இன்று சென்னையில் கரடன் இல்லத் திருமணம்,




இன்று சென்னை வாழ் புதூர் மக்கள் நலச் சங்கத்தில் கரடன் சலீம் மகன் சாகுல் ஹமித் - யாஸ்மின் அவர்களின் திருமணம் இன்று 29.9.11 காலை நடை பெற்றது!  

உள்ளாட்சி தேர்தல் சடுகுடு ஆரம்பம்! சேர்மன் பதவிக்கு பல்முனை போட்டி!


உள்ளாட்சி தேர்தல் சடுகுடு ஆரம்பம்! 
சேர்மன் பதவிக்கு பல்முனை போட்டி!
"இளையான்குடியை முன்மாதிரி 
பேரூராட்சியாக மாற்றுவேன்" - அன்வர் (அ.தி.மு.க.)


இளையான்குடி : அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து இளையான்குடியை தமிழகத்தின் மாதிரி பேரூராட்சியாக மாற்றுவேன் என அ.தி.மு.க., பேரூராட்சி தலைவர் வேட்பாளர் அன்வர் பிரசாரத்தில் தெரிவித்தார். இளையான்குடி பேரூராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் நகர் செயலாளர் அன்வர் போட்டியிடுகிறார்.

15 வது வார்டில் உள்ள ரசூலா சமுத்திரத்தில் தனது பிரசாரத்தை துவக்கி பேசியதாவது: பாதாள சாக்கடை திட்டம் , ஒவ்வொரு வார்டிலும் மகளிர் சுகாதார வளாகம், வீடுகள் தோறும் காவிரி கூட்டு குடிநீர், அனைத்து இடங்களிலும் தெருவிளக்கு வசதி செய்வதோடு முக்கிய இடங்களில் ஹைமாஸ் விளக்கு அமைத்தல், தெருக்களில் தினமும் முழு சுகாதார பணிகள் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்வர் அறிவிக்கும் நலத்திட்டங்கள் அனைத்தும் இப்பகுதி மக்களுக்கு கிடைக்கும். இளையான்குடி பேரூராட்சியை தமிழகத்தின் மாதிரி பேரூராட்சியாக மாற்றுவேன் என்றார். அவருடன் வார்டு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினர்.






பேரூராட்சி தலைவர் (சேர்மன்) பதவிக்காக இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் அல்அமீன் தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்தபோது எடுத்த படம்
தேங்க்ஸ்  டு இளையான்குடி.org  

Wednesday 28 September 2011

அழகிய கடன் அறக்கட்டளையின் பணிகள் உங்கள் பார்வைக்கு...

அழகிய கடன் அறக்கட்டளையின் பணிகள்   உங்கள் பார்வைக்கு...



                        ஜகாத் விநியோக வாழ்வாதார உதவிகள் வழங்கும் பொது...


                    ரமலானில் பித்ரா பொருட்கள் பைகளில் போட்டு தயாராகிறது.



                           குர்பானிக்காக மாட்டு சந்தையில் மாடு பிடிக்கப் படுகிறது


                              குர்பானிக் இறைச்சி துண்டு போடப் படுகிறது.


                                    வாகனகளில் வைத்து ஏழைகளுக்கு விநியோகம்


                           பங்குதாரர் இறைச்சி பைகளில் இட்டு    விநியோகம்



                                             புதூரில்   மாடு அறுக்கப்    படுகிறது.










       பெருநாள்  அன்று  பித்ரா விநியோகம் சென்னை  அலுவலகம்  முன்பு 

                                       








              மக்களுக்கு பயனளிக்கும் தரும்  மருத்துவ முகாம்கள் 



Tuesday 27 September 2011

அழகிய கடன் அறக்கட்டளையின் சார்பில் குர்பானி ஆடுகள் விற்பனைக்கு!

                     அழகிய  கடன் அறக்கட்டளையின் சார்பில்
                              குர்பானி ஆடுகள் விற்பனைக்கு!
                                                     கடந்த முறை ஆடு விற்பனை 

புதூர் மக்களுக்கு வட்டியில்லா கடன் போன்ற பொருளாதார  ரீதியான உதவிகளையும் , மேலும் பித்ரா ஜகாத், குர்பானி போன்ற மார்க்க கடமைகளில் மக்களுக்கு பணியாற்றி வரும் அழகிய கடன் உதவி அறக்கட்டளை கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் கூட்டுக் குர்பானி மற்றும் ஆடு விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஆண்டில் மேலும் ஒரு சிறப்பாக பல மாதம்களுக்கு முன்னரே நமதூருக்கு பக்கத்தில் உள்ள கிராமங்களில் வெள்ளாட்டு குட்டிகளை வாங்கி அவற்றை சிறந்த முறையில் வளர்த்து பராமரித்து வருகிறது.

இவற்றை வரும் ஹஜ் பெருநாள் சமயத்தில் சென்னையில் விற்பனை.செய்ய திட்டமிட்டு உள்ளது.


   

உள்ளாட்சி தேர்தல் களத்தில் நம்மவர்கள்

உள்ளாட்சி தேர்தல் களத்தில் நம்மவர்கள்!


தமிழகம் நடை பெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பரபரப்பாகிக் கொடிருக்கும் வேளையில் நம்மவர்களையும் அந்தப் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது  !   

பல ஆண்டுகளுக்குப் பின் நமதுரை   சேர்ந்த கரடன் ஆசைதம்பி DMK சார்பில் இளையான்குடி சேர்மன் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து விடலை வீட்டு மாப்பிள்ளை கண்ணா மங்களம் அன்வர் ADMK சார்பில் போட்டியிடுகிறார்.

மேலும் சென்னையில் நம்மவர்கள் அதிகம் வசிக்கும் 114 வார்டில் ADMK சார்பில் வழக்கறிஞர் எஸ்.எம்.கே.ஜின்னா அவர்களும் அதே வார்டில் முஸ்லிம் லீக் [காதர் மைதீன்] சார்பில் செம்பாக்கன் ஆழம் கான் அவர்களும் போட்டியிடுகின்றனர்.  

நாம் சிறு வயதில் கண்ட பம்பாய் மிட்டாய் காரர் இன்றும் ....

நாம் சிறு வயதில் கண்ட பம்பாய் மிட்டாய் காரர் இன்றும் ....  



ஹாஜி .கே.கே.இப்ராகிம் அலி மேல் நிலைப்பள்ளி காணொளி

ஹாஜி .கே.கே.இப்ராகிம் அலி மேல் நிலைப்பள்ளி காணொளி   


புதூர் பெரிய பள்ளிவாசலின் அழகிய தோற்றம்!

புதூர் பெரிய பள்ளிவாசலின் அழகிய தோற்றம்! 



புதூர் மக்களை இணைக்கும் இணைய தளம் துவக்கம்.


                                         அல்லாஹ்வின் திருப்பெயரால்...
                                புதூர் மக்களை இணைக்கும் இணைய தளம் துவக்கம்.




                                                               புதூர் பெரிய பள்ளி வாசல் 

                                             புதூர் தைக்கா பள்ளிவாசல் 


                               ஹாஜி .கே.கே.இப்ராகிம் அலி மேல் நிலைப்பள்ளி 


அஸ்ஸலாமு அழைக்கும்!

அன்பார்ந்த எனதருமை புதூர் சொந்தங்களே நம்முடைய உயிரிலும்    உறவிலும் கலந்து விட்ட நாம் பிறந்த மண்ணையும் , அங்கு பிறந்தினால் ஏற்பட்டுள்ள நமக்குள் ஏற்பட்டுள்ள உறவுகளையும் , இன்று உலகெங்கும் பறந்து கிடக்கின்ற நம் சொந்தங்களின் , செய்திகளையும் , அவர்களின் சுக துக்கங்களையும், பிரச்சனைகளையும் , உள்ளக் கிடக்கைகளையும், வருங்காலத் தலை முறைக்கு நமதூரின் வரலாறுகளையும் , ஒட்டு மொத்தத்தில் உலகின் எந்த மூலையில் நாம் கிடந்தாலும் நம் அனைவரையும் இணைக்கின்ற தளமாக இன்ஷா அல்லா இந்த இணையதளத்தை உருவாக்க எண்ணியுள்ளோம். இதற்கான தகவல்களை தந்து உதவுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம் 

.- இவன் நிர்வாகி.mob 9444822330 இ மெயில் pudurmakkal@gmail.com௦