Monday 19 March 2012

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்


முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை
 வழங்கும் தொண்டு நிறுவனங்கள்


1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை – 600 006 தொலைபேசி: 2829 5445

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை – 14 தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை – 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை – 06

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை – 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)

6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 34

7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 34

8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை – 02

9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.

10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை – 03

11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி – பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் – சென்னை 40 போன் 98400 80564

12. அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலை, எழும்பூர் – சென்னை – 08

13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி – 614 207

14. டாம்கோ 807, – அண்ணா சாலை, 5 வது சாலை, சென்னை

15. ஹாஜி. அஹமது மீரான், Managing Director Professional Courier’s

22. மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை – சென்னை – 18

16. மியாசி, புதுக் கல்லூரி வளாகம், பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14

17. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 18

ஐயப்பன் இப்ராகிம் மனைவி அலிமா பீவி வபாத் ஆனார்.

ஐயப்பன் இப்ராகிம் மனைவி அலிமா இன்று சென்னை கொருக்குப் பேட்டை நேதாஜி நகரில் வபாத் ஆனார். அன்னாரின் ஜனாஸா இன்று அசருக்குபின் வண்ணாரப்பேட்டை கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்.  

Tuesday 13 March 2012

மரண செய்தி.

மரண செய்தி. 

சின்னது மகன் இக்பால் மனைவியும், பிரேமா, ரபி ஆகியோரின் தாயாரும், ஆவேசம் அசரப் அலி மாமியாருமான   ரம்ஜான் பீவி நேற்று வபாத் ஆனார்.   அன்னாரின் ஜனாஸா இன்று 13.3.12 மக்ரிபுக்கு பின் புதூரில் நல்லடக்கம் செய்யப் பட்டது. 

Thursday 8 March 2012

INTJ தலைமையகத்தில் நடந்த புதூர் பெண்ணின் திருமணம்.

INTJ தலைமையகத்தில் நடந்த 
புதூர் பெண்ணின் திருமணம்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் இன்று மக்ரிபுக்கு பின்,  புதுரை சேர்ந்த சண்டி உமர் அவர்களின் பேத்தியும், நஹீம் அவர்களின் மகளுமான ரோசினா எனும் பெண்ணுக்கும் , ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தை சேர்ந்த காஜா முஹய்யிதீன் அவர்களின் மகன் பிர்தவ்ஸ் எனும் மணமகனுக்கும் இருவரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் எளிய முறையில் திருமணம் நடை பெற்றது. சகோதரர் அப்துல் ஹமித் கத்திபாக இருந்து குத்பா உரை நிகழ்த்தி திருமணத்தை நடத்தி வைத்தார்.     













விறு விறுப்பான விண்ணப்ப விநியோகம். புதூர் சங்கம் தேர்தலுக்கு தயாராகிறது.




புதூர் சங்க தேர்தல் அறிவிப்பு வெளியாகி முதல் இரண்டு நாட்கள் சுணக்கமாக இருந்த விண்ணப்ப விநியோகம் தற்போது சூடு பிடித்துள்ளது , அணிகள் சேர்ப்பும்,  அதற்க்கான அலுவலகம் அமைத்து உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து கொண்டிருப்பதால் இப்போதே தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
கடந்த கால நிகழ்வுகளால்   முதலில் மக்களிடம் சற்று மந்தமாக இருந்த உறுப்பினர் சேர்க்கை தற்போது விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது.  
ஐவர் குழுவினர் தங்களது அலுவலக் நேரத்தில் ஆஜராகி விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.            






மரண செய்திகள் !



மண்டக் கொட்டு பொட்டு மகனும் ரஹீம் தம்பியுமான முத்துக்கண்ணன் என்ற தமிம் அன்சாரி நேற்று 7.3.12 அன்று வபாத் ஆனார் அன்னாரின் ஜனாசா நேற்று மக்ரிப் தொழுகைக்குப்பின் பெரம்பூர் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப் பட்டது.

முண்டக்கண்ணன் திப்பு மகனும், கோஸ் உஸ்மான் மருமகனுமாகிய கபிலா எனும் ஹபிபுல்லாஹ் நேற்று வபாத் ஆனார். அன்னாரின் ஜனாசா இன்று காலை 8.3.12 காலை  9  மணியளவில் ராயபேட்டை கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.      

Tuesday 6 March 2012

ஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


ஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


தமிழகத்தில் இருந்து புனித ஹஜ் பயணம் செல்ல விரும்பும் முஸ்லிம்கள், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு அலுவலகத்தில் இருந்து விண்ணப்பத்தினைப் பெற்று பூர்த்தி செய்து ஏப்ரல் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஹஜ் கமிட்டி ரோஸ் டவர் , மூன்றாம் தளம் நுங்கம்பாக்கம் நெடுஞ் சாலை, எனும் முகவரியில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இயங்கும் அலுவலகத்தில் நேரடியாகச் சென்று விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை நகல் எடுத்தும் பயன்படுத்தலாம். பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் தரவிறக்கம் செய்ய; http://www.hajcommittee.com/index.php?value=download_
தொலை பேசி எண்கள்:044 -28227617, 044-28252519

மீலாது - மவ்லீது எப்படி வந்தது? சகோ: செங்கிஸ் கான் உரை !


Monday 5 March 2012

சாலையூர் இளையான்குடியில் நடந்த சத்திய பிரசார கூட்டம்.


 
 சாலையூர் இளையான்குடியில் நடந்த 
சத்திய பிரசார கூட்டம்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் சமிப காலமாய் ரஷாத் கலிபா எனும் அயோக்கியனை தூதர் என பின்பற்றும் 19 கூட்டம் அதிகரித்து வருவது குறித்து தொடர் விழிப்புணர்வு பிரசாரக் கூட்டங்களை இந்திய   தவ்ஹீத்   ஜமாஅத்   நடத்தி வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக நேற்று சாலையூர் பகுதியில் தெரு முனை பிரசாரக் கூட்டத்தை நடத்தியது !  இதில் மாநிலப் பேச்சாளர் முஹம்மத் முஹையிதீன் குரான் மட்டும் போதும் என்போர் யார்? எனும் தலைப்பிலும் மாநில செயலாளர் செங்கிஸ் கான் 'உலக அழிவு பற்றி இஸ்லாம்' எனும் தலைப்பிலும்
உரை நிகழ்த்தினர். மாவட்ட செயலாளர் துருக்கி ரபிக் தலைமையில் நகர செயலாளர் பாவா மற்றும் ஷெரிப் ,சிராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்த
இந்தக் கூட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமனோர் கலந்து கொண்டனர். இளையான்குடி   நகர   தலைவர்   சிவத்தா   கரீம்   நன்றியுரை   நிகழ்த்தினார் .        

Friday 2 March 2012

என்கவுண்டர் கொலையும் இஸ்லாத்தின் நிலையும்

என்கவுண்டர் கொலையும் இஸ்லாத்தின் நிலையும் 
சகோ:செங்கிஸ் கான் ஜுமுஆ உரை !part-1


என்கவுண்டர் கொலையும் இஸ்லாத்தின் நிலையும் 
சகோ:செங்கிஸ் கான் ஜுமுஆ உரை !part-2

இளையான்குடியில் இஸ்லாமிய விழிப்புணர்வு கூட்டம்.

இளையான்குடியில் இஸ்லாமிய விழிப்புணர்வு கூட்டம்.


புதூர் முஸ்லிம் நற்பணி மன்ற தேர்தல் அறிவிப்பு.

புதூர் முஸ்லிம் நற்பணி மன்ற தேர்தல் அறிவிப்பு.

கடந்த சில வருடங்களாக் சங்கத்தில் ஏற்பட்டு இருந்த பிரச்சனைகளுக்கு ஒரு வழியாக தீர்வு ஏற்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ் !  பிரச்சனைக்குரிய இரு தரப்பாரையும் சமாதானப் படுத்த ஏற்கனவே பலர் முயற்சி   எடுத்து அது பலன் தராமல் தற்போது எஸ்.எம்.கே.ஜின்னா அவர்களின் முயற்சியால் இந்த சமரச முயற்சி ஏற்பட்டுள்ளது.

  1. இதன் அடிப்படையில் சங்கத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்துவது என்றும் 
  2. புதியதாக 250 ருபாய் வாங்கி உறுப்பினர்கள் சேர்ப்பது என்றும்
  3. இருப்பிட சான்றுடன் சென்னையில் வாழும் புதூர் ஜமாத்தை சேர்ந்த திருமணமான் ஆண்களை உறுப்பினர்களாக சேர்ப்பது என்றும் ,
  4. 1.3.12 to 15.3.12 வரை உறுப்பினர் படிவம் வழங்கப்படும் என்றும், 
  5. 25.3.12 படிவங்கள் வந்து சேர கடைசி நாள் என்றும் 
  6. ஏப்ரல் 21-ல் தேர்தலை நடத்துவது என்றும் 
இடைக்கால் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

  1. ஹாஜி.சவ்வாளி.எஸ்.ஐ.யு.அப்துல் கபூர் கான் ,
  2. கமிசனர் பெரோஸ் கான்.
  3. ஜே.எம்.எலெக்த்ரிகல் ஹாஜி.இப்ராகிம்
  4. ஆச்சான்.உமர் இஸ்மாயில் 
  5. அசவ்லி எஸ்.ஐ.எ .ஆசப் அலி .   

சென்னையில் வாழும் நம் சகோதரர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன் படுத்தி,  ஜனநாயக முறையில் நமது சங்கம் வருங்காலத்தில் இன்னும் பல அரிய சாதனைகளை செய்ய சிறந்த நிர்வாகத்தை தேர்ந்தெடுக்க புதூர் மக்கள் தளம் கேட்டுக் கொள்கிறது.