Sunday 30 October 2011

துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்!







துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும்

 உழ்ஹிய்யாவின் சட்டங்களும்!

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.
சிறப்புகள்1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி
2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்.
இந்த நாட்களில் செய்யும் அமல்கள் :
1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும். மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம் - புகாரி முஸ்லிம்.
2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.
[குறிப்பு- துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.ஆதாரம் - புகாரிமுஸ்லிம்]
3- அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம்
[குறிப்பு :- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது]
அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.ஆதாரம் புகாரி முஸ்லிம்.
4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது.
ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத்.
இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.
ஆதாரம் - புஹாரி.
5- ஹஜ் பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது.
நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
ஆதாரம் :- புகாரி முஸ்லிம்.
6- உழ்ஹிய்யா:- உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.
ஆதாரம் - புஹாரி.
குர்பானி பிராணியின் வயது :
குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில் ஒட்டகத்திற்கு ஐந்து வயதும், ஆடு, மாடுகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
“முஸின்னா”வைத் தவிர வேறு எதனையும் அறுக்காதீர்கள். அது கிடைக்க வில்லையானால் ஆறுமாதக் குட்டியைக் கொடுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”.(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், நஸஈ, இப்னுமாஜா, அஹ்மத் )
இங்கு “முஸின்னா” என்று கூறப்படும் வார்த்தை ஆடு மாட்டில் இரண்டு பல் முளைத்த பிராணிகளுக்கு பயன்படுத்தப் படுகின்றது. ஒட்டகம் ஐந்து வயது முடிந்தவுடனும், ஆடு, மாடு இரண்டு வயது முடிந்தவுடனும் இரண்டு பற்கள் வருவதால், ஒட்டகம் ஐந்து வயது, ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டுமெனக் கூறப்படுகின்றது.
“முஸின்னா” கிடைக்காவிட்டால் ஆறுமாதக் குட்டியாட்டை அறுப்பது இந்த ஹதீஸில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் பிறிதொரு ஹதீஸின் மூலம் அது ஒரு தோழருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சலுகை என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
“இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச்சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்துகொள்வாரோ அவர் நமது வழியில் நடந்துகொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்தினருக்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபுர்தா(ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில் முஸின்னாவை விட சிறந்த ஆறுமாதக் குட்டியுள்ளது (அதைக் குர்பானி கொடுக்கலாமா) என்றார்.
முன் அறுத்ததிற்கு இதைப் பகரமாக்குவீராக (அறுப்பீராக). எனினும், உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இதை (குர்பானிகொடுக்க) அனுமதியில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (பரா(ரலி) – புகாரி, முஸ்லிம்)
உழ்ஹிய்யாவிற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது:
    கண் குருடு
    கடுமையான நோயானவை
    மிகவும் மெலிந்தவை
    நொண்டியானவை அங்கங்கள் குறையுள்ளவை.
கூட்டு குர்பானி:
உழ்ஹிய்யாவுக்காக அறுத்துப் பலியிடப்படும் பிராணி ஒட்டகம் அல்லது மாடாக இருப்பின் ஏழு நபர்கள் கூட்டாகச் சேர்ந்து கொடுக்க முடியும். என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.
“ஹுதைபியா என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் நாங்கள் அறுத்துப் பலியிட்டோம்”(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)
குர்பானிப் பிராணி ஆடாக இருப்பின் ஒருவர் தமக்காகவும், தமது குடும்பத்தினருக்காகவும் ஓர் ஆட்டை அறுத்துப் பலியிட முடியும்.
“நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒர் ஆட்டையே குர்பானி கொடுப்பார்.(அதாஃ பின் யஸார்(ரலி) – திர்மிதி, இப்னு மாஜா முவத்தா)
அறுக்கும் நேரம் ;
ஹஜ்ஜு பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக ஆகாது அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் - புகாரி,
யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அறுக்கும் முறை~ ஆடு மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும் (முஸ்லிம்)~ ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)~ அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி)
இறைச்சிகளை விநியோகித்தல் :
لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ
தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.[22:28 ]
ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாள்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்' என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்' என்று பதிலளித்தார்கள்.ஆதாரம்;புஹாரி எண் 5569
“உழ்ஹிய்யாக் கொடுப்பவர் தானும் சாப்பிட்டு தனது உறவினர்களுக்கும் அன்பளிப்புச் செய்து ஏழைகளுக்கு தர்மமாகக் கொடுத்தல் சுன்னத்தாகும்.

செய்யக்கூடாதவை :
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது.
குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள் அவைகளின் மாமிசம் தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.ஆதாரம்:- புகாரி,
ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.ஆதாரம்:- முஸ்லிம்
குறிப்பு:- இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு மாத்திரம்தான் அவரின் குடும்பத்தினருக்கு அல்ல.
நன்றி : இப்ராஹீம் மதனி மற்றும் மவ்லவி இஸ்மாயில் ஸலபி 

Thursday 27 October 2011

மரணச் செய்திகள்.


மரணச் செய்தி.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்!

மங்கி முஹம்மத் மீரா இன்று 28.10.11 காலை சென்னை
சர்மா நகரில் வபாத்ஆனார்.அன்னாரின் ஜனாஸா
ஜும்மாவிற்கு பின் நல்லடக்கம் செய்யப் படும்.

Wednesday 26 October 2011

ஊழலுக்கு எதிராக ஊழல்வாதிகள்!


ஊழலுக்கு எதிராக ஊழல்வாதிகள்!

கிரண் பேடி. இந்தியக் காவல் பணிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றவர். குடியரசுத் தலைவரின் கேலன்டிரி விருது, ராமன் மகாசேசே விருதுக்குச் சொந்தக் காரர்.
1980 -ம் வருடம் விதிமுறைகளை மீறி நிறுத்தியதாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் காரைக் கயிறு கட்டி இழுத்துச் சென்றவர். அந்தச் சம்பவத்தின் மூலம் கிரேன் பேடி (Crane Bedi) என அழைக்கப் பட்டவர். இரு தொண்டு அமைப்புகளை நிர்வகித்து வரும் கிரண் பேடி, ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் வேண்டும் என்று போராடி வரும் அன்னா ஹசாரே  குழுவிலும் முக்கிய உறுப்பினர்.
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது டெல்லி ராம்லீலா மைதானத்தில் கம்பீரமாக இந்திய தேசியக் கொடியை அசைத்துத் தொண்டர்களை உற்சாகப் படுத்திய கிரண்பேடி, இன்று பலரது கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா வேண்டும் என்று போராடி வரும் அன்னா ஹசாரேவின் குழுவில் உள்ள கிரண்பேடியின் மீதே ஆதாரத்துடனான மோசடி குற்றச்சாட்டுக் கிளம்பியுள்ளது.
கல்வி அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் நடத்தும் நிகழ்ச்சிகளுக்குக் கிரண்பேடிக்ச் சிறப்பு விருந்தினராக அழைப்பதுண்டு. இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் இது போன்ற அழைப்புகளை ஏற்றுச் செல்லும் கிரண்பேடி, நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் இருந்து தான் செலுத்தியதை விட அதிகமாக விமானக் கட்டணம் பெற்றுள்ளார் என்பதே கிரண்பேடி மீது கூறப் படும் குற்றச்சாட்டு.
இரு வகையில் கிரண்பேடி விமானக் கட்டணத்தை அதிகமாகப் பெற்றுள்ளார். விமானத்தில் இரண்டாம் வகுப்பு கட்டணத்தில் பயணம் செய்து விட்டு முதல் வகுப்பு கட்டணத்தைக் கேட்டுப் பெற்றுள்ள கிரண்பேடி, வீர தீரச் செயல்களுக்காக 1979 ம் ஆண்டு குடியரசுத் தலைவரின் கேலன்டிரி விருது பெற்றுள்ளதால் ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்யும் போது வழங்கப் படும் 75 சதவீதச் சலுகையை மறைத்து பிசினஸ் க்ளாசிற்கான முழு கட்டணத்தையும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளார்.
கிரண்பேடி 30 க்கும் மேற்பட்ட முறை  பயணம் செய்து நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் இருந்து அதிக பணம் பெற்ற விவரத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஆதாரத்துடன் எடுத்து வைத்த பின்னர்,  ''சேமிப்பு என்பதை ஒரு குற்றமாகப் பார்க்கிறீர்களே… இது ஆச்சர்யமாக உள்ளது. நான் அந்த நிகழ்ச்சிக்குப் பணம் பெறவில்லை. ஆனால் உயர் வகுப்பு விமானக் கட்டணம் பெற்றேன். நான் சிக்கன வகுப்பில், சலுகையில் பயணம் செய்தேன். மீதிப் பணத்தை எனது விஷன் இந்தியா டிரஸ்டில்  சேமித்தேன். இன்னொரு நிகழ்ச்சிக்கு நான் என்ன பெற்றேன் என்பது தேவையற்றது. இது நிச்சயமாக சேமிப்பு. சேமிப்பை நீங்கள் குற்றம் என்பீர்களா?" என்று பதில் அளித்தார் கிரண்பேடி.
கிரண்பேடி அதிகமாக பணம் பெற்றது குறித்து, ''கிரண்பேடி தாம் செலவளித்ததைவிட அதிகமாக பணம் பெற்றது நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்குத் தெரிந்து பெற்று இருந்தால் அது தவறு இல்லை. நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு உரிய முறையில் தெரிவிக்கப்பட வில்லையென்றால் அது தவறே'' என்று அன்னா ஹசாரே குழுவின் அங்கத்தினர்களில் ஒருவரான முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்துள்ளார்.
"சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்தப் பணத்தை நான்  எடுத்துக் கொள்ள வில்லை. என் டிரஸ்டில் தான் சேமித்தேன். லோக்பால் மசோதாவுக்காக போராடி வரும் அன்னா குழுவினர் மீது அவதூறுகளைப் பரப்புவது மகிழ்ச்சி அளிக்குமானால் எங்களைத் தூக்கில் போடுங்கள்" என்று ஆவேசப்பட்ட கிரண் பேடி, "அதிகமாகப் பெற்ற விமானக் கட்டணத்தை உரிய அமைப்புகளிடம் திருப்பித் தரப் போவதாக" அறிவித்துள்ளார். இதன் மூலம் கிரண்பேடி தன்னார்வ அமைப்புகளை ஏமாற்றி பணம் பெற்றுள்ளது உறுதியாகியுள்ளது. நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு உண்மையைத் தெரிவித்தே அதிக கட்டணம் வசூலித்து இருந்தால் அதை ஏன் அவர் திரும்பச் செலுத்த வேண்டும்?
"திருப்பிச் செலுத்தி விட்டால் நீங்கள் தவறு செய்யவில்லை என்றாகி விடுமா? உங்களுக்கும் ராசாவுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? ராசாவும் தாம் முறைகேடு செய்த பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டால் திகார் சிறையில் அடைபடாமல் வழக்கில் இருந்து விடுதலையாகி விடலாமே?" என்று திக்விஜய் சிங் கேட்பது நியாயமாகத் தானே தெரிகிறது. வீரத் தீரச் செயல்கள் புரிந்த கிரண் பேடியைப்  போன்றவர்களைக் கௌரவிக்க அரசு தரும் இது போன்ற நல்ல திட்டங்கள் மூலமும் காசு பார்ப்பது இவர்களின் மனசாட்சிக்கே விரோதமாகப் பட வில்லையா?
எரிவாயுவுக்கு இந்திய அரசு அளிக்கும் மானியத்தின் மூலம் வாங்கப்படும் எரிவாய் சிலிண்டர்களை வெளிச் சந்தையில் ரூ 50, 100 -க்கு விற்று காசு பார்க்கும் அடித் தட்டு பொது மக்களையே 2G ஊழலைப் பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது? என்று தலையங்கம் எழுதியது இந்நேரம். கிரண் பேடி லட்சக் கணக்கில் அல்லவா அரசு தரும் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்!. தவறைத் தவறு தான் என்று  துணிந்து சுட்டிக் காட்டுவதே ஊடக தர்மம். தினமும் பெல் அடிக்கும் ஒரு பத்திரிக்கை தமது தலையங்கத்தில் ''இது எப்படி ஊழல்'' என்று கிரண் பேடியின் மோசடிக்குக் கூட்டுச் சேர்ந்து ஆதரவு தெரிவிக்கிறது!.
இதற்கிடையில் அன்னா ஹஸாகுழுவிலுள்ள மற்றொரு முக்கிய நபரான அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் "ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வந்த 80 லட்சம் ரூபாயை, அன்னா ஹசாரே எந்தப் பொறுப்பிலும் இல்லாத தன்னுடைய தொண்டு அமைப்பின் வங்கிக் கணக்கில் சேர்த்துக் கொண்டார்" என்று மோசடி புகார் எழுந்துள்ளது. இவர், ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவில் தனியார் தொண்டு அமைப்புகளைச் சேர்ப்பதைக் கடுமையாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டங்களில் கலந்து கொண்ட சிலருக்காவது இப்போது புரிந்திருக்கும் - அன்னா ஹசாரே குழு ஏன் லோக்பால் மசோதாவில் இருந்து தொண்டு அமைப்புகளுக்கு விலக்கு அளித்தது என்று!. இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் லோக்பால் அமைப்பில் பொறுப்பு வகித்தால் ஊழலுக்கு புதிய இலக்கணம் எழுதப் பட்டாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.
-நன்றி : இந்நேரம்.

Tuesday 25 October 2011

நம்மவர்கள் போட்டியிட்ட இடங்களில் வாக்கு விபரம்.

நம்மவர்கள் போட்டியிட்ட இடங்களில் வாக்கு விபரம்.


Ward No:  114      Votes Polled:  14480      Valid Votes:  14480      Invalid Votes:  0
Sl.NoNameFather/Husband NameParty NameVotes SecuredStatus
1அன்பழகன்.எம்முனுசாமிஇ.தே.கா470Deposit Lost
2கார்திக்.கேகன்னியப்பன்சுயேட்சை19Deposit Lost
3சபூர்பாட்ஷா.இஸ்மாயில்சுயேட்சை174Deposit Lost
4சீனிவாசன்.பாஜி,பாலகிருஷ்ணன்சுயேட்சை130Deposit Lost
5பன்னீர்செல்வம்.வேலாயுதம்சுயேட்சை11Deposit Lost
6புஹாரி.எஅப்துல்காதர்சுயேட்சை8Deposit Lost
7மணிகண்டன்.சசந்திரபாபுசுயேட்சை32Deposit Lost
8மதிவாணன்.வடி.வடிவேல்தி.மு.க3428NotElected
9முகமது அபுபக்கர்.எம்எம் முகமது அலிசுயேட்சை166Deposit Lost
10முகமது அலி ஜின்னா.எஸ்.எம்.கேகாதர்அ.இ.அ.தி.மு.க8275Elected
11முருகவேல்.பிகே. பொன்பாண்டி நாடார்சுயேட்சை50Deposit Lost
12மோகன்ராஜ்.குப்புசாமிசுயேட்சை15Deposit Lost
13ரமேஷ்.ஆர்ரவிச்சந்திரன். ஏபி.எஸ்.பி37Deposit Lost
14ரவிக்குமார்.என்ஜி நந்தகோபால்தே.மு.தி.க584Deposit Lost
15லட்சுமிநரசிம்மன்.எஸ்வி. சங்கரநாராயணன்பி.ஜே.பி734Deposit Lost
16வெங்கடேசன்.எம்என். முத்துபா.ம.க347Deposit Lost
   
Votes Polled:  11352      Valid Votes:  11352      Invalid Votes:  0
Sl.NoNameFather/Husband NameParty NameVotes SecuredStatus
1அப்துல் ஹமீது.கே.எம்முகமது மைதீன்தே.மு.தி.க176Deposit Lost
2அயூப்அலிகான்.அஅப்துல் ரஹிம்சுயேட்சை2654Elected
3அல் அமீன்.அ.இ-இ.தே.கா1630Deposit Lost
4அன்வர்.எம்மஜீதுஅ.இ.அ.தி.மு.க2112NotElected
5ஆசைத்தம்பி.அஅலாவுதீன்தி.மு.க2525NotElected
6காதர்.டி.ஆர்.எஸ்.ஐஇபுறாகிம் நெய்னார்சுயேட்சை332Deposit Lost
7செய்யது சுபையர்.டி.கேகாதர் இபுறாகிம்சுயேட்சை57Deposit Lost
8செல்வராசன்.வேவேலுச்சாமிம.தி.மு.க123Deposit Lost
9பஷீர் அகமது.எ.ஆர்ராவுத்தர் நயினார்சுயேட்சை161Deposit Lost
10முகமது இஸ்பஹான்.மூமுகமது ஜலாலுதின்சுயேட்சை289Deposit Lost
11முகம்மது நாசர்.மெள.மெளலர்கனிசுயேட்சை1059Deposit Lost
12ராவுத்தர் நய்னார்.பீபீர் முகம்மதுபா.ம.க184Deposit Lost
13ஷாநவாஸ்.அப்துல் ரஜாக்சுயேட்சை50Deposit Lost
 
Ward No:  1      Votes Polled:  366      Valid Votes:  366      Invalid Votes:  0
Sl.NoNameFather/Husband NameParty NameVotes SecuredStatus
1தாஹிராபானு.ஆர்முகம்மது ஜமில்அ.இ.அ.தி.மு.க145Elected
2மும்தாஜ் பேகம.எ.அபுல் ஹசன்தி.மு.க81NotElected
3ராவியத்துள் பதவியாள்.எஇபுறாகிம்ஷாஇ.தே.கா140NotElected
     Ward No:  2      Votes Polled:  676      Valid Votes:  676      Invalid Votes:  0
Sl.NoNameFather/Husband NameParty NameVotes SecuredStatus
1அகமது.எஸ்.எம்மீராங்கனிசுயேட்சை17Deposit Lost
2இபுறாகிம்ஷா.எஅலலாபாக்ஸ்இ.தே.கா287Elected
3தாவூது பாட்ஷா.எஸ்சேக்தாவுதுஅ.இ.அ.தி.மு.க200NotElected
4ஜபருல்லாக்கான்.கேகமால் பாட்ஷாதி.மு.க172NotElected